3 October 2008

MS OFFICE கோப்புகளை எளிதாக PDFயாக மாற்றலாம்

|5 comments
சில பதிவுகளுக்கு முன்பு சதுரகிரி யாத்திரை மின் புத்தகத்தை உங்களுக்காக PDF வடிவில் கொடுத்திருந்தேன். அதை எப்படி PDF வடிவில் மாற்றினீர்கள் என பலரும் கேட்டார்கள். நான் PDFஆக மாற்றியது ஒரு மென்பொருளை கொண்டு ஆனால் இப்போது மிகவும் சுலபமாக Microsoft plug in கொண்டு PDFஆக மாற்றலாம்.

இந்த Plug in யை நிறுவியவுடன் Save As மெனுவில் புதியதாக “Save as PDF or XPS” என்று ஒரு option இருக்கும். நீங்கள் மாற்ற விரும்பும் Microsoft Office கோப்பயை திறக்கவும் Save As PDF மூலம் எளிதாக நீங்கள் விரும்பும் படி மாற்றலாம்.

இந்த Plug in Microsoft Office Access 2007, Microsoft Office Excel 2007, Microsoft Office InfoPath 2007, Microsoft Office OneNote 2007, Microsoft Office PowerPoint 2007, Microsoft Office Publisher 2007, Microsoft Office Visio 2007, Microsoft Office Word 2007 ஆகிய மென்பொருட்களில் வேலை செய்யும்.

Download Microsoft Office Save As PDF or XPS Plug in

நீங்கள் Microsoft Office 2007 யை பயன் படுத்தவில்லையா???

உங்களுக்காகத்தான் இந்த மென்பொருள்

30 September 2008

உங்கள் ஜன்னல் போலியானதா???

|2 comments
தலைப்பை பார்த்ததும் எதோ உங்கள் வீட்டு ஜன்னலை பற்றி எழுதுகிறேன் என்று நினைக்கவேண்டாம். எல்லாம் நமது கணினி விண்டோஸைப்பற்றிதான்... நாம் பயன்படுத்தும் விண்டோஸ் மென்பொருட்கள் எல்லாமே காசு கொடுத்துதான் வாங்கவேண்டும். 10% பேர் மட்டுமே இதை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். மீதி கணினியில் உள்ள விண்டோஸ் அனைத்துமே போலியானவையே...

இணையம் பயன்படுத்தப்படும் கணினியில் Automatic update on செய்து இருந்தால் உங்கள் விண்டோஸ் போலியானது என்று இணயம் சில நாட்களில் கண்டுபிடித்துவிடும். உடனே படத்தில் உள்ளது போல கணினி திரை மாறிவிடும். அந்த கணினி திரை நீங்கள் மாற்றினாலும் அடுத்த 60நிமிடத்தில் மீண்டும் விண்டோஸ் போலியானது என்று வந்து நிற்க்கும். இந்த பிரச்சணை நம் எல்லோரும் ஒரு முறையாவது சந்திக்க நேர்ந்திருக்கும். இதனால் நம்மூர் Hardware வல்லுனர்கள்(!) Automatic updateயை Off செய்யுமாறு அறிவுருத்துவார்கள். அதை எழிதாக இந்த சுட்டியில் உள்ள மென்பொருளின் மூலம் Crack செய்யலாம்.

Download Windows Genuine Advantage Crack

6 September 2008

சரியான தீனி

|3 comments
நண்பர் தமிழ் பையன் கடந்த பதிவில் பின்னூட்டத்தில் "உங்கள் பதிவுகள் மேலும் பலரை சென்றடைய Tamilish.com-ல் பகிரவும்" என்று கூறியிருந்தார். நல்ல விஷயங்கள் பலருக்கும் பயன்படட்டுமே என்ற கூறினார் போலும்.

உடனே அந்த முகவரிக்கு சென்று எனக்கான கணக்கை தொடங்கி எனது வலைப்பக்க முகவரியை அங்கு பகிர்ந்தேன். பகிர்ந்த மறு நொடி உங்கள் பதிவு மாற்றப்பட்டது என்ற தலைப்பில் ஒரு மின் அஞ்சல் வந்தது அதில்

"KRICONS அவர்களுக்கு, வணக்கம்! தங்களின் பதிவுகளை Tamilish-il பகிர்ந்து கொள்வதற்கு நன்றி. தாங்கள் Tamilish-க்கு புதியவர் என்பதால் சில தகவல்கள் தர விரும்புகிறேன். 1. தாங்கள் Submit செய்யும் போதும் தங்கள் தளத்தின் Home Page Url (http://www.kricons.co.cc/) submit செய்கிறீர்கள். அதற்கு மாறாக எந்த தலைப்பை submit செய்கிறிர்களோ அந்த URL கொடுக்கவும். உதாரணத்திற்கு \"Firefoxல் Mouseன் விளையாட்டுகள்\" இந்த பதிவு Sumbit செய்யும் போது, இந்த http://www.kricons.co.cc/ URL Submit செய்ய வேண்டாம். அந்த பதிவுக்குரிய பிரத்யேக URL http://kricons.blogspot.com/2008/08/firefox-mouse.html Submit செய்யவும்.அப்போதுதான் tamilish வாசகர்களுக்கு உங்கள் பக்கத்தை படித்து அதை பற்றி விமர்சிக்க வசதியாக இருக்கும். இந்த விளக்கம் தங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். Submit சம்பந்தமான உங்கள் சந்தேகங்களுக்கு இந்த http://www.tamilish.com/about/en பக்கத்தில் பதில்கள் உள்ளன. அதை பார்க்கவும். மற்றும் Tamilish தளத்தில் அடுத்தவர் பதிவுகளை வாசித்து, வாக்களித்து, உங்கள் கருத்துக்களையும் தெரியபடுத்தவும். மேலும் சந்தேகங்கள் இருந்தால், இந்த mail-க்கு பதில் அனுப்பவும். அல்லது service@tamilish.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பவும். நன்றியுடன், அருண், Tamilish.com"

என்ன ஒரு அக்கறையுடன் இந்த பதில். ஆச்சரியமாகவும் இருந்தது. உடனே நான் கடைசியாக எழுதிய மூன்று பதிவுகளை மட்டும் அந்த வலைத்த்ளத்தில் பகிர்ந்தேன்.

என்ன ஒரு ஆச்சரியம் கடந்த இரு வாரங்களாக எந்த ஒரு புதிய பதிவையும் எழுத முடியவில்லை. அனாலும் எனது பக்கத்திற்க்கு வருபவர்களின் எண்ணிக்கை சராசரியாக ஒரு நாளைக்கு 200 பேர். முன்பெல்லாம் சராசரியாக 50 பேர் மட்டுமே. இது எனக்கு உற்ச்சாகமாக உள்ளது.

இதை பார்க்கும் போது நண்பர் பிகேபி ஒரு முறை " உங்கள் வலைப்பக்கத்தில் வருபவர்களுக்கு சரியான தீனி கிடைத்து விட்டால் நிச்சயம் மறுபடியும் வருவார்கள்" எவ்வளவு உன்மை உள்ளது இதில்.

நீங்கள் எதிர் பார்க்கும் தீனியை விட நிச்சயம் கொஞ்சம் அதிகமாகவும் அதே சமயம் ஜீரணிக்கும் படியும் தொடர்ந்து எழுதுவேன்

27 August 2008

Firefoxல் Mouseன் விளையாட்டுகள்

|3 comments
Firefoxல் உங்களுடைய Mouseயை வைத்து சிறப்பாக Browse செய்ய பல்வேறு வசதிகள் உள்ளன. எவ்வாறு சிறப்பாக Browse செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Moving Back & Forward

உங்கள் கீபோர்டில் உள்ள shift key பிடித்துக்கொண்டு உங்கள் Mouseன் scroll Wheelஐ கீழே scroll செய்தால் அது பிரெளசரின் முன் பக்கத்திற்க்கும் மேலே scroll செய்தால் அது பிரெளசரின் பின் பக்கத்திற்க்கும் செல்லும்.

Close a tab page without even displaying it

ஒரு Tabஐ Close செய்ய அந்த Tabன் மேல் உங்கள் Mouse Pointerயை கொண்டு சென்று scroll Wheelஐ கிளிக்கினால் அந்த tab உடனடியாக Close செய்யப்படும்

Opening links in a new tab

ஒரு Linkயை புதிய tabல் open செய்ய அந்த Linkன் மேல் scroll Wheelஐ கிளிக்கினால் அது புதிய tabல் திறக்கப்படும்.

Scroll line by line while reading a web page

கணினியில் நீங்கள் புத்தகத்தை படிக்கும் போது இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Altகீயை அழுத்திக் கொண்டு உங்கள் scroll Wheelஐ திருகினால் அது ஒவ்வொரு வரியாக நகரும்.

In and Out images/text

CTRL + Mouse Scroll wheelயை கொண்டு web pageயை Zoom In and Out செய்யலாம்.

Scrolling though the tabs

FireFoxல் நிறைய Tabகளை Open செய்துள்ளீர்கள். உங்கள் கணினி திரையிலிருந்து மறைந்த்தும் சில Tabகள் இருக்கும். அதை பார்க்க Tabன் கடைசியில் ஒரு அம்புக்குறியை கிளிக்கினால் தெரிந்துகொள்ளலாம். ஆனால் Mouse Pointerயை tabகளின் மேல் வைத்து Scroll wheelயை திருகினால் tab அனைத்தையும் Scroll செய்து பார்க்கலாம்.

இது போல இன்னுமும் பல விஷயங்கள் FireFoxல் ஒளிந்துள்ளன அவற்றை வேறு சில பதிவுகளில் பார்ப்போம்


22 August 2008

உலகின் பிரபலமான நாளிதழ்கள் இலவசமாய்...

|3 comments
சில தினங்களுக்கு முன்பு உலகின் பிரபலமான நாளிதழ்களை ஆன்லைனில் Safari பிரெளசர் மூலம் சில செட்டிங்ஸ்களை மாற்றி படிக்கலாம் என்று எழுதியிருந்தேன்.

இப்போது அதை பொய்யாக்கும் வகையில் ஒரு வளைத்தளம் எல்லா உலகின் பிரபலமான நாளிதழ்களையும் இலவசமாக படிக்கும் வசதியை ஏற்படுத்திக்கொடுக்கிறது. அதுவும் scribd.com போலத்தான் எவரும் அவர்களுக்கு கிடைக்கும் புத்தகங்களை பதிவேற்றலாம். ஆனால் இந்த வளைத்தளத்தில் scribd.com போல புத்தகங்களை பதிவிறக்க முடியவில்லை. அவர்கள் ஐபுத்தகமாக Flashல் தெரியும்படி வடிவமைத்துள்ளனர். எனினும் இந்த வளைத்தளம் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அந்த வளைத்தளத்திற்க்கு செல்ல கிளிக்குங்கள்.

Yahoo News வழியாக இந்த பதிவு.

20 August 2008

அட நானா இது...

|2 comments
அட படத்தில நம்ம இளைய தளபதி விஜய் தானுங்கன்னா. இன்றைய நவீன உலகத்தில் பொழுது போகவில்லை என்று இணையம் பற்றி தெரிந்தவர்கள் கண்டிப்பாக சொல்லமாட்டார்கள். அவ்வளவு விஷயங்கள் பொதிந்து கிடக்கிறது. அதை நாம் தான் பொருமையுடன் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

அப்படி தேடும் போது கிடைத்தது தான் YearBookYourself வளைத்தளம்.

இதில் உங்கள் படத்தை பதிவேற்றம் செய்து பல்வேறு முக அமைப்புகளை காணலாம். உங்கள் படத்தை நீங்களே பார்க்கும் போது நிச்சயம் சிரிப்பு வந்தே தீரும். இதில் பதிவேற்றம் செய்யும் படம் உங்களுடைய பாஸ்போர்ட் அளவு படமாக இருந்தால் நன்றாக இருக்கும். அவர்கள் கூறுவது நேராக உள்ள படத்தை பதிவேற்றம் செய்யுங்கள் என்று. உலக நாயகன் கமல் இந்த வளைத்தளத்தை தசாவதாரத்திற்க்கு முன் பார்த்திருத்தால் அவருக்கு இன்னும் உதவியாக இருந்திருக்குமோ???

Go to YearBookYourself

18 August 2008

சதுரகிரி யாத்திரை மின் புத்தகம்

|10 comments
கடந்த ஆடி அமாவாசை அன்று சதுரகிக்கு நண்பரின் கட்டாயத்தால் இழுத்து செல்லப்ப்ட்டேன். அங்கு செல்லும் வரை தெரியாது அது தான் சதுரகிரி என்று. அங்கு சென்று திரும்பியது என் கண்னில் பட்டது சக்தி விகடனில் ஒவ்வொரு இதழிலும் வெளிவந்த சதுரகிரி யாத்திரையின் கடைசி தொடர்தான். படித்தேன் பிரம்மித்தேன். அனைத்து தொடரையும் எடுத்தேன். இதோ இந்த பதிவில் உங்களுக்காக அந்த சதுரகிரி யாத்திரை தொடர் முழுவதையும் உங்களுக்காக கொடுத்துள்ளேன். சுந்தர மாகாலிங்கத்தின் அருள் பெற உங்களுடன் சேர்ந்து பிரார்த்திக்கிறேன்.

ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்துக்கு அரோஹரா!

ஸ்ரீ சந்தன மகாலிங்கத்துக்கு அரோஹரா!

சதுரகிரி யாத்திரை மின் புத்தகத்தை பதிவிறக்க

கிளிக்குங்கள்

அல்லது

கிளிக்குங்கள்


ஐபுத்தகமாக படிக்க
கிளிக்குங்கள்

15 August 2008

முக்கிய கோப்புகளை அழித்துவிட்டீர்களா???

|2 comments
எத்தனை முறை நீங்கள் முக்கிய கோப்புகளை நிரந்தரமாக அழித்திருப்பீர்கள் அல்லது உங்கள் கணினியில் Recycle binயை Empty செய்துயிருப்பீர்கள். நாம் அனைவரும் ஏதாவது ஒருமுறையாவது இதை செய்துயிருப்போம். அதற்காக இனி கவலைபட வேண்டியதில்லை. அதற்க்காக நீங்கள் கூகினால் ( Googleல் தேடினால் என்பதன் சுருக்கம்) உங்களுக்கு நிறைய மென்பொருட்கள் வந்து குவியும். எது நல்ல மென்பொருள், எது எப்படி இருக்கும் என்ற கவலைப்பட வேண்டாம்.

உங்களுக்காக இதோ மிகசிறந்த 4 மென்பொருட்கள்.


1. Undelete Plus

எல்லா அழிக்கப்பட்ட கோப்பை கண்டுபிடிகும் இலவச மென்பொருளில் மிகவும் சிறந்தது இது. இது மிகவும் எழிதாக பயன் படுத்தும் வகையில் உள்ளது.

Download and Install Undelete Plus


2. Restoration

இதை நீங்கள் உங்கள் கணினியில் நிறுவாமலயே நீங்கள் அழிக்கப்பட்ட கோப்புகளை கண்டுபிடிக்கலாம் என்பதே இதன் சிறப்பு.

Download Restoration


3. PC Inspector File Recovery

இது பயன் படுத்துவது மிகவும் கடினம் ஆனால் மேல் உள்ள மென்பொருட்கள் கண்டுபிடிக்க முடியாத்தை எல்லாம் இந்த மென்பொருள் கண்டுபிடித்து தள்ளிவிடும்.

Download and Install PC Inspector File Recovery


4. Recuva

இந்த மென்பொருளின் உச்சரிப்பே “Recover” போல உள்ளாது. இது படிப்படியாக அழிக்கப்ப்ட்ட கோப்புகளை கண்டிபிடிக்க உதுவும். இதில் Advance modeம் உள்ளாதால் இதில் அந்த கோப்பின் தகவல்களை அறியலாம்

Download and Install Recuva

7 August 2008

ஒலிம்பிக் 2008 விளையாட்டுகளை நேரடியாக பார்க்கலாம்

|0 comments
நாளை ஒலிம்பிக் 2008 விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகப்போகிறது. அந்த நிகழ்ச்சி முழுவதையும் online video streaming technologies மூலம் நேரடியாக காணும் வசதியை சில நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளது. இப்போதைக்கு இந்த வசதி இந்தியாவில் இல்லை என நினைக்கிறேன். இருந்தாலும் சில முக்கிய நிகழ்வுகளை YOUTUBE வசதி மூலம் காண Google ஏற்பாடு செய்துள்ளது.

Opening ceremony முதல் Closing ceremony வரை அனைத்து நிகழ்ச்சிகளையும் இணைய உதவியுடன் US, UK, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா நாடுகளில் உள்ளவர்கள் நேரடியாக கண்டுகளிக்கலாம் மற்ற 77 நாடுகளில் உள்ளவர்கள் YOUTUBE வசதி மூலம் காண Google ஏற்பாடு செய்துள்ளது.

Live streaming websites of UK, US, Australia and Canada

இந்தியா, ஜப்பான், தென்கொரியா, நியூஜிலாந்த், நைஜீரியா ஆகிய நாடுகள் உட்பட 77 நாடுகளில் உள்ளவர்கள் சில முக்கிய நிகழ்வுகளை YouTube மூலம் Beijing Olympics 2008 தளத்தில் பார்க்கலாம்.

6 August 2008

சூப்பர் ஸ்டாருக்கு சுளீர்...

|1 comments
துநாள் வரை எங்களால் மதிக்கப்படுபவராக இருந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு...

உங்களை எங்களுள் ஒருவராக, தமிழராகத்தான் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால், பல நேரங் களில் 'நான் அப்படி இல்லை' என்று நிரூபித்தீர்கள். 'பாபா' பட வெளியீட்டின்போது பா.ம.க-வினர் உங்களுக்கு ஆட்டம் காட்டியபோது, 'தேர்தல் வரட் டும்...' என்று முதலில் சவால் விட்டுவிட்டு பிறகு சத்யநாராயணா மூலம் சமரச அறிக்கை வெளியிட்டு பிரச்னையை அப்படியே மூடினீர்கள்.

இன்று வரையில் ஏதாவது ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்திருக்கிறீர்களா? முதலில் ஜெய லலிதாவை வசைபாடினீர்கள். பிறகு, அவரை 'தைரியலட்சுமி' என்று ஸ்துதி செய்தீர்கள்.

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் எடுப்பார் கைப்பிள்ளையாகவே இருக்கப் போகிறீர்கள்? பிறர் ஏற்றிவிடும் உசுப்புகளுக்கெல்லாம் எத்தனை காலம் ரணகளப்படப் போகிறீர்கள்? உங்கள் படங்களில் நீங்கள் சித்திரிக்கப்படுவதைப்போல் நீங்கள் உங்களை உண்மையிலேயே சூப்பர் மேன் என்று நினைத்துக்கொள்கிறீர்களா?

நீங்கள் வாய்ஸ் கொடுப்பது ஆரம்பத்தில் சீரியஸாகவே இருந்தது. ஆனால், போகப் போக வடிவேலு ஜோக்கையே ஓவர்டேக் செய்து விட்டது. அடிப்படை அரசியலறிவு குறித்த தெளிவான பார்வை இல்லாத நீங்கள், போகிற போக்கில் அரசியல் விமர்சனங்களை அள்ளி வீசுவது காமெடியின் உச்சம். ஓட்டுப்போட்டு விட்டு வாக்குச்சாவடி வாசலிலேயே 'இன்ன கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டேன்' என்று கடந்த தேர்தலில் நீங்கள் வெளிப்படையாகச் சொன்னது ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் விரோதமானது என்று உங்களுக்குத் தெரியுமோ... தெரியாதோ? ஆனால், அதுகுறித்து இதுவரை நீங்கள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இதுதான் உங்கள் அரசியல் ஞானமோ?

சினிமாவில் 'ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா' என்று பில்ட் அப்களைக் கொடுக்க வேண்டியது... தமிழன் கொடுத்த தங்கக் காசுகளைக் கர்நாடகத்தில் முதலீடு செய்வதாக குக்கிராமத்த்து டீக்கடை வரை செய்தியாகிக் கிடக்கிறது. நிஜ வாழ்க்கையிலும்கூட நீங்க நன்றாகத்தான் நடிக்கிறீர்கள், சார்!

தேசிய கட்சிகளைச் சேர்ந்த அரசியல் வாதிகளைப் போல தண்ணீர்ப் பிரச்னை வரும்போதெல்லாம் உங்களுக்குச் சிக்கல் தான். தமிழகமா, கர்நாடகமா என்று தத்தளித்துப் போய்விடுகிறீர்கள். அந்த மாதிரி இக்கட்டான நேரத்திலெல்லாம் உங்களுக்குப் பக்கபலமாக நின்றவர்கள் நாங்கள் தான்.

ஆனால், 'குசேலன்' படத்துக்காக கர்நாடக மக்கள்கிட்ட நீங்க வருத்தம் தெரிவிச்சு, நீங்கள் அடகு வைத்திருப்பது உங்கள் தன்மானத்தையும் தமிழ் மக்களின் மானத்தையும்! உங்களால் ஆதாயப்படுபவர்கள் வேண்டுமானால் அதை ஆதரிக்கலாம். உங்கள் தலை உருட்டப்படும்போது எல்லாம் கடைக்கோடி தமிழன்கிட்ட இருந்து, 'எங்க தலைவனை ஏண்டா இம்சை பண்றீங்க'ன்னு ஓங்கி ஒலிக்கிற குரல், இந்தப் பிரச்னையில எங்கேயும் கேட்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஒகேனக்கல் பிரச்னையில் நீங்கள், 'பொதுவா இருக்குற தண்ணீரை கொடுக்க முடியாதுன்னா, அவங்களை உதைக்கவேணாமா?' என்று உணர்ச்சி வசப்பட்டீர்கள். உடனே, தமிழகமே உங்களை தூக்கிப் பிடித்தது.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் தொடர்பாக நடத்தப்பட்ட உண்ணாவிரதம் முடிந்த சில நாட்களில், 'கர்நாடகத்தில் 'குசேலன்' படத்தை வெளியிடத் தடை போடப்போவதாக மிரட் டல்கள் வருகிறதே' என்று கேள்வி எழுந்தபோது, ''உலகம் முழுக்க வெளியாகிற என் படம் கர்நாடகத்தில் வெளியாகாவிட்டாலும், எனக்குக் கவலை இல்லை'' என்று நீங்கள் சொன்னபோது, 'நிஜமான தமிழன் நீங்கதான்' என புல்லரித்துப் போய்விட்டோம்.

ஆனால், கன்னட இனவெறி அமைப்புகளும், கன்னட திரையுலகமும் சில தினங்களுக்கு முன்பு 'குசேலனை திரையிட அனுமதிக்க மாட்டோம்... மீறி திரையிட்டால், தியேட்டர்களைக் கொளுத்துவோம்' என கொக்கரித்ததும் கன்னட திரையுலகினருக்கு ஒரு அவசரக் கடிதம் எழுதி உங்கள் பேச்சுக்கு வருத்தப்படுவதாக ஒரு ஸீன் போட்டீர்கள். கன்னடத் திரையுலகம் உங்களை மன்னிக்கத் தயாராக இருந்தாலும், கன்னட வெறியர்கள் விடுவதாக இல்லை; கலாட்டாக்களில் இறங்கி தங்கள் வன்முகத்தைக் காட்டினர்.

உடனே நீங்கள் ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னை யில் நடந்த 'குசேலன்' படக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விழாவில், ''கன்னட மக்கள் அனைவரையும் குறிப்பிடும்படி 'அவங் களை உதைக்க வேணாமா' என நான் பேசியிருக்கக்கூடாது. வன்முறையில் ஈடுபடுபவர்களை உதைக்கணும் என்று பேசியிருக்கவேண்டும். கர்நாடக மக்களி டம் பாடம் கற்றுக்கொண்டேன்... இனி எச்சரிக்கையாகப் பேசுவேன்''னு தலை குனிஞ்சு பேசியதை எந்தவகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.

'நடிகனை நடிகனா மட்டும் பார்க்க வேண்டியதுதானே'னு உங்களுக்கு ஜால்ரா போடுறவங்களெல்லாம் கேட் கலாம். நாங்கள், உங்களை நடிகராக மட்டும் பார்க்கவில்லை. எங்களில் ஒருவராகத்தான் பார்த்தோம். அதனால்தான், எம்.ஜி.ஆருக்கு அடுத்த படியாக எங்கள் இதய சிம்மாசனத்தில் உங்களை உட்கார வைத்தோம். ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்த கதையாகத் தமிழர்களின் மொத்தத் தன்மானத்தையும் கன்னடர்களிடம் அடகு வைத்திருக்கிறீர்கள்.

எத்தனையோ சினிமாக்காரர்களை இன, மொழி வேறுபாடு பார்க்காமல்தான் தமிழகத்தில் ஆதரிக்கிறோம். அவர்களின் படத்தை ஓட வைக்கிறோம். ஆனாலும், எங்களுக்குக் கிடைத்த வரம் என்றுதான் உங்களை நினைத்தோம். உங்கள் பட ரிலீஸ்தான் எங்களுக்குப் பொங்கல், தீபாவளி! உங்கள் வார்த்தைகள்தான் எங்களுக்கு வழிகாட்டி. அதனால்தான் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்... எங்களையெல்லாம் ஆளவேண்டும் என்று நினைத்தோம். ஏனோ, கடைசிவரைக்கும் கமுக்கமாக இருந்துவிட்டீர்கள். அப்போதும் நாங்கள் உங்கள் பக்கமே இருந்தோம். ஆனால், உங்கள் படம் லாபகரமாக ஓடவேண்டும் என்பதற்காக எங்கள் தன்மானத்தையே விட்டுக்கொடுக்கிற அளவுக்கு நீங்கள் எப்போது இறங்கி வந்தீர்களோ அப்போதே தெரிந்துவிட்டது, நீங்கள் எவ்வளவு பெரிய பிசினஸ் பேர்வழி என்று! இத்தனை நாள் எங்கள் மண்ணில் ஒரு வியாபாரியாகத்தான் வாழ்ந்தீர்களா? 'என்னை நம்பிப் படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்றுதான் வருத்தம் தெரிவித்தேன்' என்று நீங்கள் சொல்வதை நம்ப இனியும் நாங்கள் இளித்தவாயர்கள் அல்ல. கன்னடத்தில் 'குசேலன்' ஓடாவிட்டால் எவ்வளவு நஷ்டமாகும் என்று எங்களிடம் சொல்லியிருக்கலாம். உண்டியல் குலுக்கியாவது உங்கள் மடியில் கொண்டுவந்து கொட்டியிருப்போம். உங்ககிட்டதான் பண வசதியே இல்லாமப் போச்சு! சம்பாதித்த அவ்வளவு பணத்தையும் நதிநீர்த் திட்டத்துக்கு ஒரு கோடி ஒதுக்கியது(?) மாதிரி தமிழக நலனுக்காக செலவு பண்ணியே அழித்துவிட்டீர்கள்!

'குசேலன்' படத் தயாரிப்பாளர்கள் நஷ்டப்பட்டுவிடுவார் கள் என்று கன்னட மக்களிடம் கருணைக் கோரிக்கை வைத்தீர்களே... 'தலைவர் படம் பிய்ச்சுக்கிட்டுப் போகும்' என்று நம்பி, பல லட்சங்களை முதலீடாப் போட்டு ரசிகர் மன்ற ஷோ எடுத்து நடத்திய அத்தனை மாவட்ட ரசிகர்களும் கையைச் சுட்டுக்கொண்டு தவிப்பது உங்களுக்குத் தெரியுமா? பட ரிலீஸன்று கொடி பிடிக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும்தான் நாங்கள் உங்களுக்குத் தேவை. மற்றபடி, நாங்கள் கையைச் சுட்டுக்கொண்டால் என்ன... தலையை வெட்டிக்கொண்டால் என்ன?

நீங்கள் கர்நாடக மக்களிடம் வருத்தம் தெரிவித்ததற்கு நாங்கள் ஏன் அவமானப்படுகிறோம் என்றால், இப்போதும் உங்களைப் பச்சைத் தமிழனாக நினைப்பதால்தான். இல்லை என்றால் 'ஒரு கன்னடத்து ஆள் கன்னடத்து மக்கள்கிட்ட மன்னிப்புக் கேட்டதில் என்ன ஆச்சர்யம்' என்று நினைத்துக்கொண்டு எங்கள் வேலைகளில் மூழ்கியிருப்போமே...! அப்ப... நீங்க தமிழகம்தான் எனக்கு எல்லாமே என்று சொல்றதெல்லாம் 'குசேலன்' படத்துல வர்ற மாதிரி கெஸ்ட் ரோல்தானா?

- இப்படிக்கு
நேற்று வரை உங்கள் ரசிகனாக
இருந்த தமிழன்.

4 August 2008

PC Tools Spyware மென்பொருள் இலவசமாக...

|0 comments
WestPac Banking Corporation என்ற நிறுவனம் நமக்காக PC Tools Spyware Doctor, Privacy Guardian and Firewall Plus ஆகிய வைரஸை அழிக்கும் மென்பொருளை ஒரு வருடம் இலவசமாக வழங்குகிறது. PC Tools Spyware Doctor என்பது ஒரு மிகசிறந்த வைரஸை அழிக்கும் மென்பொருட்களில் ஒன்றாகும். இந்த மென்பொருளை ஒருவருடத்திற்க்கு இலவசமாக பெற கீழ்கண்டவற்றை செய்தால் போதும்.

1.இந்த வளைத்தளத்திற்க்கு செல்லவும்.

2."Download security software - Free for the first 12 months" என்ற லின்கை கிளிக்கினால் அது செல்லும் பக்கத்தில் உங்களுக்கு காட்டும் மூன்று இலவச மென்பொருட்களையும் செலெக்ட் செய்து, Signup செய்யவும்.

3. உடனே உங்களுக்கு ஒரு அந்த மூன்று இலவச மென்பொருளின் லின்க்ஸும் மின் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.


இதன் மூலம் உங்களுடைய கணினியை ஒரு வருடத்திற்க்கு இலவசமாக வைரஸ் இல்லாமல் பாதுகாக்கலாம்.

1 August 2008

Vista டிப்ஸ் மற்றும் டிரிக்குகள் இலவசமாக

|2 comments
Microsoft நிறுவனம் தனது Vistaவை பயன் படுத்துபவர்களுக்காக இலவசமாக சில டிப்ஸ் மற்றும் டிரிக்குகளை வழங்குகிறது. அதை PDF வடிவில் பெற இங்கு கிளிக்குங்கள். நீங்கள் USAவில் வசிப்பவரானால் உங்களுக்கு அதை காகித வடிவிலும் உங்களுடைய முகவரிக்கு அனுப்பிவைக்கிறார்கள். அதற்கு இந்த படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அது முற்றிலும் இலவசம் தான் ஆனால் அதற்க்கு கூரியர் தொகை மட்டும் செலுத்தவேண்டும். Vistaவை பயன்படுத்துபவர்கள் இந்த புத்தகத்தை கட்டாயமாக் படிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த புத்தகம் Windows Vistaவை பயன்படுத்துபவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் மேலும் பல விஷயங்களை Windows Vistaவை பற்றி அறிந்துகொள்ளாம்

PDFவடிவில் புத்தகத்தை பதிவிறக்க

அல்லது
பேப்பர்வடிவில் புத்தகத்தை பெற (USA Only)


குறிப்பு: படத்திற்க்கும் பதிவிற்க்கும் சம்மந்தமில்லை

30 July 2008

கைபேசியில் உங்கள் வளைத்தளம்...

|0 comments
உலகம் போகும் வேகத்திற்க்கு நாமும் மாறித்தான் ஆக வேண்டும். அதனால் தான் எனது வலைப்பக்கத்தை இனி உங்கள் ஐபோனிலும் படிக்கலாம். எனது கைப்பேசி வளைப்பதிவின் முகவரி http://kricons.mofuse.mobi. துரதிஷ்டவசமாக S40 ஜாவா மற்றும் S60 சிம்பையன் தொழிநுட்பம் பயன் படுத்தப்பட்ட கைப்பேசிகளில் எந்த யுனிகோட் எழுத்துக்களும் தெரிவதில்லை. வெறும் சிரு சிரு கட்டங்களாக தெரியும். அனால் ஐ-போன் மற்றும் Windows கைப்பேசியில் எனது பதிவை அழகாக படிக்கலாம். Windows கைபேசியை பயன்படுத்துபவர்கள் தமிழ் யுனிகோட் எழுத்து தெரிய இந்த பக்கத்தில் செல்லலாம்.


சரி நீங்கள் பிளாக்யை கைப்பேசி பதிவை செய்துவிட்டீர்கள்!!!. நான் எப்படி செய்வது என்று கேட்பது புரிகிறது. இதோ வழி.
இந்த தளத்திற்க்கு செல்லுங்கள். உங்களுக்கான ஒரு கணக்கை துவங்க்குங்கள். உங்கள் கைப்பேசி தளத்திற்க்கான் பெயரை தேர்ந்தெடுங்கள். உங்கள் வளைத்தளத்தின் RSS முகவரியை டைப்பிடுங்கள். அவ்வளவு தான் உங்கள் பிளாகிற்க்கான் கைபேசி வளைத்தளம் ரெடி. நிங்கள் USAவில் இருந்தால் கைப்பேசியில் SMS மூலமாக உங்களுக்கு கைப்பேசி வளைத்தளதிற்க்கான் Linkயை அனுப்புகிறார்கள். வரைவில் அனைத்து நாடுகளிலும் எதிர்பார்க்கலாம்.

28 July 2008

உலகின் மிக வேகமான பி்ரெளசர்

|5 comments

உலகின் மிக வேகமான பிரெளசரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இது apple நிறுவனத்தின் மென்பொருள். இதில் உங்கள் கணினியில் நிறுவினால் உங்கள் கணினியே அழகாகிறது. நீங்கள் பார்க்கும் வளைத்தளத்தில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் மிக அழகாக தெரிகின்றன. குறிப்பாக யுனிகோட் எழுத்துக்கள் மிகவும் அழகாக தெரிகின்றன. (Firefoxல் கொஞ்சம் அசிங்கம்தான்)


இதில் உள்ள மிகப்பெரிய பிளஸ், இதில் ஒரு வளைத்தளம் safari பழைய வெர்சனில், Internet Explorerரில், Fier Foxல் மற்றும் ஐ-போனில் எவ்வாறு தெரியும் என்றும் சில Settingகளை வைத்துப் பார்க்கலாம்


இதில் மிகப்பெரிய மைனஸ் இதில் ஒரு கோப்பை பதிவிறக்கம் செய்யும் போது Firefoxயை போல Pause வசதி இல்லை. அது போன்ற சில சில மற்றங்களை செய்த்தால் நிச்சயம் இந்த Safari அந்த Firefoxயை மிஞ்சும்.

Download Safari

இதில் உள்ள  இருந்த ஹாக்(HACK). இந்த ஹாக் இப்போது வேலை செய்யவில்லை. அனால் சில இலவச பத்திரிக்கைகளை இதில் படிக்கலாம். அந்த ஹாக் தெரிந்தவர்கள் கூறலாம்.

உலகின் பிரபலமான நாளிதழ்கள் PC Magazine, MIT Technology Review, Popular Mechanics, MacWorld, Lonely Planet, Reader’s Digest, etc  போன்றவற்றை எப்படி இலவசமாக படிப்பது என்று உங்களுக்கு சொல்கிறேன். மேலும் இதில் உள்ள High-resolution படங்களை உங்கள் கணினியில் பதிவிறக்கலாம்.

எப்படி??? 


சஃபாரி பிரொளசரை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு  go to Edit -> Preferences -> Advanced and check the option that says "Show Develop menu in menu bar."

பிறகு Developயை கிளிக் செய்து User Agentல் Mobile Safari 1.1.3 - iPhoneயை செலெக்ட் செய்யவும்.

அவ்வளவுதான் உங்கள் சஃபாரியிலிரு்ந்து zinio.com/iphone திறக்கவும். பிறகு உங்களுக்கு பிடித்த நாளிதழ்களை இலவசமாக படிக்கலாம்

26 July 2008

பல வளைத்தளத்தில் உங்கள் கோப்புகளை பதிவேற்றம் செய்ய

|0 comments
நமக்கு பிடித்த மென்பொருள், MP3 பாடல்கள், வீடியோ கோப்புகள், கணினி விளையாட்டு மென்பொருட்கள் போன்றவற்றை உலகில் எந்த மூலையில் உள்ளவரும் பயன் படுத்திக்கொள்ள பயன்படுவதுதான் Rapidshare மற்றும் Megaupload போன்ற வளைத்தளங்கள்.


ஆனால் இதில் எந்த வளைத்தளதில் நீங்கள் பதிவேற்றம் செய்ய என்ற குழப்பமாக உள்ளதா??? அதை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா??? கவலையை விடுங்கள் இரண்டிலும் ஒரே கிளிக்கில் பதிவேற்றம் செய்யலாம். என்ண ஆச்சரியமாக உள்ளதா??

ஆம் TinyLoad என்ற வளைத்தளம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதில் Rapidshare அல்லது/மற்றும் Megauploadல் உங்கள் கோப்புகளை ஒரே கிளிக்கில் பதிவேற்றம் செய்யலாம். இதில் மிகப் பெரிய வசதி என்னவென்றால் இதில் பதிவு செய்ய அவசியமில்லை.

Go to TinyLoad

24 July 2008

வி‌ண்வெ‌ளி‌யி‌ல் ‌திருமண‌ம் செ‌ய்ய அணுகவு‌ம்

|0 comments

உங்கள் திருமணம் விண்வெளியில் நடக்க வேண்டுமா? எங்களை அணுகுங்கள் என்று விளம்பரப்படுத்தி உள்ளது ஒரு ஜப்பான் நிறுவனம். ஆனா‌ல் ‌திருமண‌ம் நட‌ப்பது இ‌ன்றோ அடு‌த்த மாதமோ அ‌ல்ல 2011‌ல்.

2011‌‌ம் ஆ‌ண்‌டி‌ல் விண்வெளியில் திருமணம் செய்ய விருப்பம் உள்ள மணமக்கள் எங்களிடம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எ‌ன்‌கிறது அ‌ந்த ‌விள‌ம்பர தகவ‌ல்.

இ‌ங்கேயே ஒரு ‌திருமண‌த்‌தி‌ற்கு ல‌ட்ச‌க்கண‌க்‌கி‌ல் செலவு செ‌ய்‌‌கிறோ‌ம். விண்வெளி‌யி‌ல் எ‌ன்றா‌‌ல்!!!! கட்டணம் எவ்வளவு இரு‌க்கு‌ம்? ரொ‌ம்ப ஒ‌ன்று‌ம் அ‌திக‌ம் இ‌ல்லை வெறு‌ம் ரூ.10 கோடிதா‌ன். 10 கோடி கொடு‌த்து ப‌திவு செ‌ய்து கொ‌ள்ளு‌ம் ஜோடி‌‌க்கு விண்வெளியில் சிறிய விண்வெளி ஓடத்தில் திருமணம் இனிதே நடந்தேறும்.

இ‌ந்த 10 கோடி‌யி‌ல் ‌பூ‌மி‌யி‌ல் நட‌க்கு‌ம் ‌திருமண வரவே‌ற்பு, மணம‌க்க‌ளி‌ன் ஆடை, போ‌க்குவர‌த்து செலவு, மணம‌க்களு‌க்கு ‌வி‌ண்வெ‌ளி‌யி‌ல் பய‌ணி‌ப்பத‌ற்கான 4 நா‌ள் ப‌யி‌ற்‌சி‌க் க‌ட்டணமு‌ம் அ‌ட‌ங்கு‌ம்.

மணமக்களுடன் ‌திருமண‌ம் நட‌த்‌தி வை‌க்க அ‌ய்யரோ அ‌ல்லது பா‌தி‌ரியாரோ உட‌ன் செ‌ல்லலா‌ம். அதை‌த் த‌விர மணம‌க்களுட‌ன் மேலு‌ம் 2 பே‌ர் விண்வெளி திருமணத்தில் பங்கேற்கலாம். அதை‌த் த‌விர ‌வி‌ண்வெ‌ளி‌யி‌ல் நட‌க்கு‌ம் ‌திருமண‌ம் பூ‌மி‌யி‌ல் நேரடியாக ஒ‌ளிபர‌ப்பு‌‌ம் செ‌ய்ய‌ப்படு‌ம்.

திருமணச் சடங்குகளில் பெரும்பாலானவற்றை பூமியில் முடித்துக்கொண்டு உச்சகட்டமாக மாலை மாற்றுவது அல்லது நம்ம ஊர்க்காரர்கள் என்றால் தாலி கட்டுவதை விண்வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இ‌ந்த விண்வெளி திருமணத் திட்டத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ராக்கெட் நிறுவனத்துடன் ஜப்பான் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஜ‌ப்பா‌‌னி‌ன் ‌வி‌ண்வெ‌ளி ‌திருமண‌த் ‌தி‌ட்ட‌த்தை‌ப் பா‌ர்‌த்தா‌ல் அடு‌த்தது ‌நில‌விலேயே தே‌னிலவு‌க் கொ‌ண்டாடு‌ம் ‌தி‌ட்ட‌ம் வரு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்கலா‌மோ...

இந்த வழியாக இந்த பதிவு

22 July 2008

YouTube நகர் படங்களை மென்பொருள் இல்லாமல் பதிவிறக்கலாம்

|2 comments
இப்போதல்லாம் எதற்கெடுத்தாலும் மென்பொருள் வந்து விட்டது. அதை எல்லாவற்றையும் நிறுவ நம் கணினியில் தான் இடமில்லை. கணினியில் நிறுவி தேவையற்ற இடத்தை நிறப்பவும் சிலருக்கு பிடிப்பதில்லை. அனால் நாம் நினைப்பது மென்பொருளில்லாமல் நம் கணினியில் கிடைத்தால் எப்படியிருக்கும்.


இதே போல் தான் மிக விரைவான ஆன்லைன் அகராதியை உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன். இப்போது YouTube நகர் படங்களை எந்தவித மென்பொருள் இல்லாமல் பதிவிற்க்கலாம். அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த KissYouTube or KeepVid or Vixy தளங்களுக்கு செல்லுங்கள் உங்களுக்கு பிடித்த YouTubeயின் முகவரியை கொடுங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த அந்த நகர் படத்தை இப்போது நீங்கள் பதிவிறக்கலாம்.

Vixy.net
Vixy ல் நீங்கள் உங்களுக்கு பிடித்த நகர் படங்களை பல வித Formatல் பதிவிறக்கும் வசதி உள்ளது. YouTube வீடியோ formatலிருந்து AVI/MOV/MP4/MP3/3GP போன்ற formatலிம் பதிவிறக்கலாம்



KissYouTube

இதில் நீங்கள் மிக விரைவாக உங்கள் YouTube வீடியோவை flv formatல் பதிவிறக்கலாம். இதில் YouTube வீடியோவின் முகவரிக்கு முன்னால் kiss சேர்த்து முகவரியை டைப்பினால் போதும். உதாரணமாக YouTubeயின் முகவரி http://www.youtube.com/watch?v=7sn40JvmglE என்றால் http://www.kissyoutube.com/watch?v=7sn40JvmglE என்று டைப்பினால் போதும். அந்த YouTube வீடியாவை flv Formatல் பதிவிறக்கலாம். ஆனால் அந்த வீடியோவை பார்க்க FLV Player தேவை.
அதை இங்கு பதிவிறக்கலாம்

20 July 2008

நிமிடத்திற்கு ஒரு கணினி திரை

|5 comments
நாம் நம் கணினியை ஆன் செய்யதவுடன் நம் கண்களுக்கு இதமாக நம் எண்ணப்படி கணிணி திரையை அமைத்துக்கொள்ள பலருக்கு விருப்பம். ஆனால் தினம் ஒரு திரையை மாற்ற வேண்டும் என்றால் கொஞ்சம் சிரமம் என்று என்ன வேண்டாம் உங்களுக்காகவே பல மென்பொருட்கள் உள்ளன. அதில் மிகவும் பிரபலாமானதை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

உலகில் படங்களுக்கு பிரபலமான வளைத்தளங்களில் முதல்மையானது Flickr மற்றும் அதற்கு அடுத்தபடியாக Photobucket. Flicker போன்ற சில தளங்களிலிருந்து புதிய படங்களை இந்த மென்பொருள் உடனுக்குடன் உங்கள் கணினி திரைக்கு கொண்டுவந்து சேர்க்கிறது. இதில் உள்ள செட்டிங்கள் மூலம் எந்த வளைத் தளதிலிருந்து உங்களுக்கு படங்கள் வேண்டும் எனவும், எத்தனை நிமிடத்திற்கு, மணிநேரத்திற்கு, நாளுக்கு ஒரு முறை உங்கள் கணினி திரை மாற வேண்டுமெனவும் வைத்துக்கொள்ளலாம்.

இதில் உங்கள் தி்ரை ஒரு படம் தெரியும் படியும் பல படங்களின் Thumbnail தெரியும்படியும் வைத்துக் கொள்ளலாம்.

இத்தனை சிறப்பு அம்சங்களை கொண்ட மென் பொருளை இங்கு பதிவிறக்கலாம்

18 July 2008

கைப்பேசி மீது காதல் கொண்டவர்கள் பார்க்கக்கூடாதது

|0 comments
நீங்கள் உங்கள் கைப்பேசியை மீது அதிக அக்கறை வைத்துக்கொள்ள முடியவில்லையா??? இதோ உங்களுக்காகத்தான் இந்த நகர் படம்.


16 July 2008

உங்கள் பயர்பாக்ஸில் கட்டாயம் இருக்க வேண்டியவை

|3 comments


நீங்கள் இப்போதுதான் பயர்பாக்ஸ் பிரெளசரை பயன்படுத்துகிறேர்களா??? நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.


இல்லையென்றால் பயர்பாக்ஸ் பிரெளசரை இங்கு இலவசமாக பதிவிறக்கலாம்.


இப்போது உலகின் மிகவும் சிறப்பான பிரெளசரில் குறிப்பிடத்தக்கது பயர்பாக்ஸ். சில தினங்களுக்கு முன்பு இந்த மென்பொருள் நிறுவனம் மென்பொருள் பதிவிறக்கத்தில் கின்னஸ் சாதணை எல்லாம் நிகழ்த்தியது. சரி விஷயத்திற்க்கு வருவோம். இந்த பயர்பாக்ஸ் பிரெளசரில் அனைவரையும் கவர்ந்த விஷயம் plug-insதான். ஆயிரக்கணக்கான plug-insல் உள்ளன.


முக்கியமான ஐந்து Plug-insகள் மட்டும் இதோ உங்களுக்காக.


1.IETab
நீங்கள் Internet Explorerயை விரும்பினாலும் வெறுத்தாலும் அது இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. துரதிஷ்டவசமாக சில வளைத்தளங்கள் அதில் மட்டும் தான் ஒழுங்காய் தெரியும். அதற்க்கான தீர்வு தான் இந்த plug-ins. பயர்பாக்ஸில் ஒரு வளைத்த்ளம் சரியாக தெரியவில்லை என்றால் Statusbarல் ஒருசிறிய ஐக்கான் இருக்கும் அதை கிளிக்கினால் பயர்பாக்ஸ் தானகவே அது Internet Explorerல் அந்த வளைத்தளம் எவ்வாறு தெரியுமோ அதை பயர்பாக்ஸிலேயே பார்க்கலாம்


2. Autocopy
நீங்கள் செலக்ட் செய்த TEXTடுகளை உடனடியாக கிளிப்போர்டில் காப்பி செய்து நீங்கள் Mouseன் மிடில் பட்டனை அழுத்தும் போது Pasteசெய்கிறது. இதனால் Ctrl + C & Ctrl + V போன்ற தேவையற்ற கீபோர்டு சாட்கட்கள் தேவையில்லை.


3.GMailManager
நீங்கள் GMailலில் கணக்கு வைத்துள்ளிர்களா நிச்சயம் உங்களுக்கு இந்த plug-ins மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இதில்
• ஒரே ஒரு கிளிக்கில் நிறைய GMail கணக்குகளை Login செய்யலம்
• ஒரே ஒரு கிளிக்கில் உங்களுடைய GMailன் Inboxயை ஓப்பன் செய்யலாம்
• உங்களுக்கு வந்த கடைசி 10மெயில்களை பட்டியலிடுகிறது.
• புதிதாக மெயில் வந்தால் உங்களுக்கு அலார்ட் செய்கிறது
• வேண்டுமென்றால் புதிதாக மெயில் வந்தால் உங்களுக்கு ஒலி அலார்ட் செய்கிறது


4.Fireuploader
Flickr, Google Picasa Albums, YouTube, Facebook and Box.net. போன்ற தளங்களில் உங்களுடைய Fileகளை Upload விரைவாக செய்யலாம்.


5.Piclens
இணையதில் நீங்கள் தேடும் படங்களை அட்டகாசமாய் 3D தாக்கத்தில் "ஸ்லைடு ஷோ"போல இறக்கம் செய்யாமலே பார்க்க இந்த Add-on உதவுகின்றது.


Quick links to download and install the plug-ins


1. Download IETab
2. Download Autocopy
3. Download GMailManager
4. Download Fireuploader
5. Download Piclens

14 July 2008

விரைவாக அதிக கோப்புகளை பெயர் மாற்றம் செய்ய சுலபமான வழி

|2 comments

டிஜிட்டல் கேமிராவால் எடுக்கப்பட்ட டிஜிட்டல் படங்களை உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யும் போது அந்த கோப்பின் பெயர் Image048.jpg, Image049 etc., இப்படிததான் இருக்கும் அதனால் அந்த கோப்பின் பெயரை வைத்துக்கொண்டு எந்த ஒரு உருப்படியான தகவலையும் நம்மால் பெறமுடியாது.


ஒரு கோப்பினை மொழிமாற்றம் செய்ய அந்த கோப்பினை செலக்ட் செய்துகொண்டு F2 கீயை அழுத்தி அல்லது Right கிளிக் Renameயை செலக்ட் செய்து அந்த கோப்பின் பெயரை எடிட் செய்யலாம். ஆனால் ஒவ்வொரு கோப்பாக F2 அழுத்தி பெயர் மாற்றா வேண்டுமானால் அது எவருக்குமே பிடிக்காத காரியம்.


அதனால் தான் அந்த கோப்புகள் அனைத்தயும் உங்களின் அர்த்தமுள்ள பெயர்களாக மாற்ற இதோ ஒரு எழிய வழி.


  1. முதலில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டிய கோப்புகளை அனைத்தயும் செலக்ட் செய்யவும்.
  2. F2 கீயை அழுத்தவும். உடனே அனைத்து கோப்புகளின் செலக்சனும் மறைந்து முதலில் உள்ள கோப்பு மட்டுமே எடிட் செய்ய முடியும்.
  3. இப்போது உங்களின் விருப்பமான பெயரை அதில் எழுதி (Delhi Visit) Enter பட்டனை தட்டவும்.
  4. அவ்வளவுதான் அந்த முதல் கோப்பு Delhi Visit.jpg என்ற பெயர் மற்றம் செய்யப்பட்டிருக்கும் அதற்க்கு அடுத்தடுத்த கோப்புகள் Delhi Visit(1).jpg, Delhi Visit(3).jpg இப்படியாக மாற்றப்பட்டிருக்கும்.

இந்த சுலபமான வழி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன்.

12 July 2008

நம்பமுடியாத அதிவேக ஆன்லைன் அகராதி

|0 comments

முன்பெல்லாம் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தேட வேண்டும் என்றால் மிகவும் பிரபலமான அகராதி OXFORD Dictionary தான். பிறகு சில மென்பொருட்கள் வந்தன... அனால் அந்த மென்பொருட்களை நிறுவினால் தேவையில்லாத RAM மற்றும் கணினியின் பயன்பாட்டு வேகம் குறைவதால் சிலருக்கு பிடிப்பதில்லை.


அப்படி பட்டவர்களுக்காத்தான் Definr அறிமுகப்படுத்துகிறது நம்பமுடியாத அதிவேக ஆன்லைன் அகராதி. இதில் ஒரு வார்த்தைக்கான அர்த்தம் சராசரியாக 14மைக்ரோசெகன்ட்ஸ் வருகிறது என்று இவர்கள் வாக்குறுதியும் அளிக்கிறார்கள். இவர்கள் Ruby powered by Rails with MySQL செர்வரை பேக்எண்டாக பயன் படுத்துகிறார்கள். மேலும் சராசரியாக அந்த செர்வரில் 10000 வார்த்தைகள் cache மெமரியில் இருப்பதால் உடனுக்குடன் பதில்கள் வருவதாக கூறுகிறார்கள்.


இப்படி அதிவேக ஆன்லைன் அகராதி இருக்க நீங்கள் ஏன் Dictionary.com or Google Search define keywordயை பயன் படுத்தவேண்டும். நான் சொல்வது உண்மையா இல்லையா நீங்களே ஒரு முறை இந்த தளத்தை பார்வையிடயும்.


>> Visit Definr


உலகம் போகும் வேகத்தில் அதற்க்கு இணையாக நாமும் மாறித்தான் ஆகவேண்டும். மாற்றம் ஒன்றே என்றும் மாறாமல் இருப்பது.

10 July 2008

வலைப்பதிவில் வருமானம்

|4 comments

உங்களது வலைப்பகத்தில் Googleலின் AdSense போன்று வேறு சில வருமானம் தரும் விளம்பரங்களை தர விருப்பமா???


இதோ உங்களுக்காகத்தான் இந்த பதிவு
.



Google AdSense என்பது உலகின் மிகப்பெரிய விளம்பர நெட்வொர்க் ஆகும். அதை நமது வலைப்பக்கத்தில் நிறுவினால் நமது வலைப்பக்கத்தில் உள்ள வார்த்தைகளின் மூலம் அது சம்மந்தமாக விளம்பரத்தை நமது வலைப்பக்கத்தில் காட்டும். நமது வலைப்பத்திற்க்கு வருபவர்களின் எண்ணிக்கை மற்றும் அந்த விளம்பரங்களின் மீது செய்யப்படும் கிளிக்கின் எண்ணிக்கையை பொறுத்து அந்த வலைப்பதிவர்க்கு வருமானம் கிடைக்கும்.

இப்போது இது போல வேறு சில விளம்பர நெட்வொர்க் நிறுவனங்கள்.


மேலும் இந்த நிறுவங்கள் மூன்று வகையாக வருமானத்தை தருகின்றனர். அவை
CPA, CPC மற்றும் CPM.

Cost Per Action Ad Networks (CPA)

Cost Per Click Ad Networks (CPN)

Cost Per 1000 Impression Ad Networks (CPM)

8 July 2008

செல்பேசி பயனர்களை அச்சுறுத்தும் ஹேக்கர்கள்

|0 comments
நம் நாட்டில் மாதம் தோறும் பல லட்சம் செல்போன் இணைப்புகள் புதிதாக பெறப்படுகின்றன. இதில் மற்றவர்களுடன் பேசலாம் என்றாலும், பெரும்பாலானவர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது எஸ்.எம்.எஸ் சேவை தான்.

தற்போது இந்த எஸ்.எம்.எஸ் பயன்படுத்தி ஹேக்கர்கள் (Hackers), செல்போன் பயனாளர்களை சொந்த நிதி விவரங்களை திரட்டுவது உள்ளிட்ட மோசடி வேலைகளில் கவனம் செலுத்தக் கூடும் என்று சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரிக்கை செய்துள்ளது.

சமீபத்தில் வடஇந்தியாவைச் சேர்ந்த ஒரு செல்பேசி பயனாளருக்கு வந்த எஸ்.எம்.எஸ்-ல் பிரபல நிறுவனத்தின் மொபைல் பரிசுப் போட்டியில் தங்களுக்கு சுமார் ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தொகையைப் பெற ஒரு சர்வதேச தொலைபேசி எண்ணைக் கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு அந்த எஸ்.எம்.எஸ். தெரிவித்தது. முதலில் உற்சாகமடைந்த அந்த நபர், பிறகு யோசித்துப் பார்த்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த பிரபல நிறுவனத்தின் எந்தப் பொருளையும் தாம் பயன்படுத்தாத போது எதற்கு இதுபோன்று எஸ்.எம்.எஸ். வருகிறது என்று சந்தேகம் கொண்டார்.

இச்சம்பவம் தற்போது செல்போன் பயனாளர்களை எச்சரிக்க உதவி புரிந்துள்ளது. அதாவது இதுபோன்ற நம்பிக்கையூட்டி செல்போன் வாடிக்கையாளர்களை ஏதாவது எண்ணை தொடர்பு கொள்ளச் செய்து தகவல்களைப் பெற்று கிரெடிட் கார்டு, வங்கிக் கணக்கு மோசடிகளில் ஈடுபடலாம் என்று செக்யூரிட்டி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

கார்ட்னர் வெளியிட்டுள்ள தகவலின் படி இதுபோன்ற மோசடிகளால் உலகம் முழுதும் பாதிக்கப்பட்ட ஒரு தனி நபர் 1,244 டாலர்கள் வரை நஷ்டமடைகிறார் என்று தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியா செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகபட்ச எல்லைகளை தொடவுள்ள நிலையில் இந்த மோசடிகள் கணினித் துறையிலிருந்து செல்போன்களுக்கு மாறலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட வடஇந்தியருக்கு வந்த அந்த ஏமாற்று எஸ்.எம்.எஸ். இதற்கு முன்னோடி என்று ஏஷியன் ஸ்கூல் ஆஃப் சைபர் லா தலைவர் ரோஹாஸ் நாக்பால் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு எண்ணின் தரவுகளை மற்றொரு நபருக்கு தெரிவிப்பது பற்றிய விதிமுறைகள் இந்யாவில் மிக பலவீனமாக இருக்கிறது என்றும் இந்த துறையை சார்ந்தவர்கள் கருதுகின்றனர்.

வரும் காலங்களில் புதுவகை செல்பேசிகள் ஒரு முழு அளவிலான கணினிப் பயன்பாடுகளாகவே மாறும் சூழ்நிலையில் இது போன்ற அச்சுறுத்தல்கள் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை சேவை வழங்குவோரின் உதவியுடன், புதிய விதிமுறைகளையும், கண்டுபிடிப்புத் தொழில் நுட்பங்களையும் மேம்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

7 July 2008

ஐடிகாரர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை

|5 comments
நீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடையது. வெற்றி என்பது உங்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள். வாழ்க!

பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல! உங்களின் பெற்றோர் தங்களது பணிக் காலத்தின் இறுதியில் வாங்கும் ஊதியத் தொகையை, நீங்கள் முதல் மாதமே வாங்கி விடலாம். அதற்காக, அவர்களை விடவும் நீங்கள் அதிபுத்திசாலி என்றோ, திறமையாளர் என்றோ, பெரிய மனிதராகவோ எண்ண வேண்டாம்.

உறவினர்களை அற்ப ஜந்துக்கள் போல நினைக்க வேண்டாம். தம்பி- தங்கைகளைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்யுங்கள். குடும்பத்தின் பந்த- பாசத்தை, இணைய தளத்தில் டௌன் லோட் செய்ய முடியாது! வெளிநாட்டுப் பணம் வரலாம்... வெளிநாட்டுப் பண்பாடு வரலாமா? பிற மனிதர்கள் எல்லோருமே நாம் பயன்படுத்திக் கொள்ள மட்டும் அல்ல!

பத்து ரூபாய் கூடுதல் சம்பளம் என்றதும் கம்பெனியைக் கைகழுவுவது கொஞ்ச காலம் பெருமையாகத் தெரியலாம். ஆனால், ஒரு நாள்... இந்தத் துறையின் செயல்பாடே இதனால் ஸ்தம்பிக்க வாய்ப்பிருக்கிறது.

உணவு, உறக்கம், ஓய்வு, காலா காலத்தில் இல்லாதபடி உடம்பை- மனதைச் சீர்குலைத்தால், 40 வயதுக்குப் பிறகு உயிர் வாழ்வதே பிரச்னையாகி விடும். யோசியுங்கள்.

எப்போதும் ஏ.ஸி-யில் இருப்பதால், உங்களுக்கு வியர்வையே வருவதில்லை. அது, உடலுக்குக் கெடுதல். உடலை வியர்க்க விடுங்கள். தண்ணீர்த் தாகம் எடுக்காத போதும் நீர் அருந்துங்கள். கண்ட கண்ட குளிர்பானங்கள் குடிப்பதை விட்டு விட்டு, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை சாறு அருந்துங்கள். பார்லியும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் நிகழ வேண்டிய காலைக் கடனை முடிக்க மாத்திரைகள் சாப்பிடுவதும் நல்லதல்ல. கண்களிலும் கவனம் வையுங்கள்.

உட்கார்ந்தே இருப்பதால் எடை கூடும்; சர்க்கரை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலும் பழுத்துக் கிடக்கும். மூளைக்கு வேலை என்பதால் ரத்த அழுத்தமும், சக்கைப் போடு போடும். எல்லாவற்றையும் எதிர்பார்த்து வெற்றி கொள்ளுங்கள்.

காதலிக்கும்போது அல்லது திருமணத்துக்குப் பெண் தேடும் போது... சம்பளம், வேலைவாய்ப்பு, செலவழிக்கும் இயல்பு போன்றவற்றை இரண்டாம்பட்சமாக வைத்துக் கொண்டு, ஒழுக்கம், குணம், பண்பாடான குடும்பம் ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

'இன்று போலவே என்றும் சம்பளம் வரும்' என்று கனவு காணாதீர்கள். சிக்கனமாக செலவழிக்கப் பழகுங்கள். உங்களால் அதிகம் செலவழிக்க முடியும் என்பதற்காக, சிரமப்பட்டு சம்பாதிப்பவர்களது மனம் புண்படும்படி ஜம்பம் அடிக்காதீர்கள். அந்நிய நாட்டின் தயவில் அதிகம் சம்பாதிப்பவர்களாகிய பலரும் இந்த நாட்டு வெற்றிக்கு உழைப்பவரை இளக்காரமாக நினைக்காதீர்கள்.

வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பும் போது, ஓட்டல்களில் தங்கிக் கொண்டு... உறவினர்களை- அம்மா- அப்பாவை, ''என்னால் வர முடியாது. இங்கு வந்து பார்... ஆட்டோவுக்கு வேண்டுமானால் காசு தருகிறேன்!'' என்று கூறி அசிங்கப்படுத்தாதீர்கள். பணத்தை விட ரத்தம் கனமானது.

வெளிநாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவு என்பது உண்மைதான். என்றாலும் சிறிது நேரமாவது தாத்தா- பாட்டி... அதாவது உங்களின் பெற்றோர், உங்கள் பிள்ளையைக் கொஞ்சுவதற்கு- உணவு ஊட்டு வதற்கு அனுமதி கொடுங்கள்.

உங்களை காயப்படுத்துவதாக இந்த பதில் அமைந்தால், என்னை மன்னியுங்கள்! உங்களை நோகடிப்பது எனது நோக்கம் அல்ல. இவை யாவும், உங்களைப் போன்றோ ரின் பெற்றோர்கள், உங்களிடம் சொல்ல முடியாமல் என்னிடம் புலம்பிய புலம்பல்கள். நான் வெறும் தபால்காரன்... அவ்வளவே! நமக்கு வரும் எந்த நோட்டீஸூக்கும் தபால்காரனை நோக முடியாது.


நன்றி, விகடன்.

6 July 2008

'எங்கே தேடுவேன்?'

|0 comments
அது ஒரு தேசத்தின் தலைநகரம்.அங்கே ஓவியக் கண்காட்சி ஒன்று நடந்தது. வரிசையாகப் பல ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. கண்காட்சியின் ஒரு பகுதியில், கொஞ்சம் வித்தியாசமான ஓவியங்கள் இரண்டு அருகருகே தொங்கின.


வேறொரு தேசத்தில் இருந்து வந்திருந்த பெரிய மனிதர் ஒருவர் அந்த ஓவியங்களைப் பார்த்தார்.

அதில் ஓர் ஓவியத்தைச் சுட்டிக்காட்டி, அங்கே நின்று கொண்டிருந்தவரிடம் விசாரித்தார்.

‘‘இது யார்?’’

‘‘இவர்தான் கோரோசோவ்!’’

பெரிய மனிதருக்கு ஒன்றும் புரியவில்லை.

‘‘கோரோசோவ்... வா... அப்படின்னா?’’

‘‘இவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா... இதுவரை கேள்விப்பட்டதில்லையா?’’ ‘‘இல்லையே...!’’

‘‘இவர் ஒரு பெரிய மேதை!’’

‘‘அப்படியா...?’’

‘‘ஆமாம்... நீராவி எந்திரம், ரயில் இன்ஜின், ரேடியோ, விமானம் எல்லாம் கண்டுபிடித்தவர் இந்த கோரோசோவ்!’’

‘‘ஓ... அப்படியா? சரி... அடுத்த படத்தில் இருப்பவர்?’’ & பெரிய மனிதர் கேட்டார்.

‘‘மஞ்சு கௌங்கி!’’

‘‘இவரது பெருமை என்னவோ?’’

‘‘கோரோசோவைக் கற்பனை செய்து படைத்தவரே இவர்தான்!’’ கேட்டவர் குழம்பிப் போய் வெளியே வந்து விட்டார்.


நண்பர்களே... நம் பெரியவர்கள் ஆண்டவனையும் இப்படித்தான் நமக்கு அறிமுகப் படுத்துகிறார்கள். ஓர் உருவத்தைக் காட்டி, ‘இவர்தான் கடவுள். இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் படைத்தவர் இவரே!’ என்கிறார்கள்.
‘சரி! இவரைப் படைத்தவர் யார்?’ என்று ஒரு கணம் யோசித்தால், அவர் ஒரு சிற்பியாக இருப்பார் அல்லது ஓவியராக இருப்பார். சரி... அப்படியானால் கடவுளை எப்படிப் பார்ப்பது? எங்கே பார்ப்பது?


இந்தக் கேள்விக்கு சுவாமி விவேகானந்தர் தெளிவாக பதில் சொல்கிறார்:

‘‘ஆலயத்தில் உள்ள சிலைகளில் கடவுளைப் பார்ப்பவன் பக்தியின் அடிமட்டத்திலேயே நிற்கிறான். அடுத்தவரது துன்பத்தைப் போக்குவதில் கடவுளைப் பார்ப்பவன், ஆகாயம் அளவுக்கு உயர்ந்து நிற்கிறான்!’’


நன்றி, விகடன்.

4 July 2008

வேகப் பிசாசு!

|0 comments
இந்தியாவில், சூப்பர் பைக்குகளின் படையெடுப்பு ஆரம்பித்துவிட்டது. யமஹாவுக்கு அடுத்தபடியாக, இப்போது DUCATIம் சூப்பர் பைக்குகளைக் களமிறக்கி இருக்கிறது. DUCATI சூப்பர் பைக்குகளில் பெயர் பெற்றது, 1000 சிசி திறன்கொண்ட 'DUCATI 1098' பைக். இதுவும் இந்தியாவில் விற்பனைக்கு வந்து இருக்கிறது.


DUCATIன் தோற்றமே, இதயத் துடிப்பை எகிறவைக்கும். அருகில் சென்று பார்த்தால்,
உடனடியாக பைக்கை எடுத்துக்கொண்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் பறக்க வேண்டும் என மனசு பரபரக்கிறது. 'இந்த பைக்குக்கு, இளம் பெண்களின் லிஃப்ட் தொந்தரவு நிச்சயம் இருக்கும்' என்கிறார்கள் இதன் ரசிகர்கள்.



ஸ்டார்ட் பட்டனைத் தட்டியவுடன், கொஞ்சம் தாமதித்துதான் ஸ்டார்ட் ஆகிறது. காரணம், பைக்கினுள் இருக்கும் சென்ஸார்கள், இன்ஜினில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதைச் சோதித்த பிறகுதான் ஸ்டார்ட்டர் மோட்டாரைச் சுழல அனுமதிக்கிறது. பைக் ஸ்டார்ட் ஆனவுடன் 'கீச்' சத்தம் காதைக் கிழிக்கிறது. சத்ததைக் கேட்டவுடன் தெருநாய்கள் தெறித்து ஓடிவிடும்.



முதல் கியரைத் தட்டியதும் தலையில் 'நங்'கென்று கொட்டியது போல வெறிகொண்டு பறக்கிறது. இந்த பைக்கை, பயபக்தியுடன் அலுங்காமல் குலுங்காமல் ஓட்டுவதெல்லாம் வேலைக்கு ஆகாது. கிளட்ச்சைப் பிடித்து ஓட்ட உடம்பில் எக்ஸ்ட்ரா சக்தி வேண்டும். 160தீலீஜீ சக்திகொண்ட இந்த வேகப் பிசாசை ஓட்ட 'தில்' நிறைய வேண்டும். 6 ஸ்பீட் கியர் பாக்ஸைக்கொண்ட இந்த பைக்கின் வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டுமென்றால், பயிற்சி எடுத்துக்கொள்வது நல்லது.



பிரேக்குகள் பிடித்த நொடியில் நிற்கின்றன. ஆனால், நீண்ட நேரம் ஓட்டினால், இன்ஜின் சூடு கால்களின் தொடை வரை ஏறுகிறது. 26 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த பைக்கை, வாழ்நாளில் ஒரு முறையாவது ஓட்டிப் பார்த்துவிட வேண்டும் என்பதுதான் பைக் ரசிகர்களின் தீராத ஆசை!


நன்றி, விகடன்.