19 May 2008

சிகரெட்டுகளை தின்று உயிர்பிழைத்த நபர்!

திங்களன்று சீனாவை உலுக்கிய பயங்கர பூகம்பத்தின் போது இடிபாடுகளில் சிக்கி சுமார் 4 நாட்களுக்கும் மேலாக இருந்த 46 வயது நபர் காகிதங்களையும் சிகரெட்களையும் தின்று உயிர் பிழைத்துள்ளார். பெங் ஸீஜுங் என்ற அந்த நபர் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பெய்ச்சுவான் என்ற இடத்தில் பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினார்.வலது கையை மட்டுமே அவரால் அசைக்க முடிந்தது. உடலின் மற்ற உறுப்புகள் இடிபாடுகளின் அழுத்தத்தால் அசைக்க முடியாமல் போனது.வெள்ளிக்கிழமை மாலை இடிபாடுக‌ளிலிருந்து மீட்கப்பட்ட இவர், செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். "இடிபாடுகளு‌க்கு‌ள் அகப்பட்டு‌க் கொ‌ண்டது‌ம் அடிபட்ட இடது கைக்கு முதலில் கட்டுப் போட்டேன், பிறகு உணவைப் பற்றி யோசித்தேன், என்ன செய்வதென்று தெரியவில்லை. பாக்கெட்டில் வெறும் சிகரெட்டுகளே இருந்தன. அதனை துண்டுதுண்டாக வெட்டி சாப்பிட்டேன், பிறகு காகிதங்களை சாப்பிட்டேன், மேலும் உடலின் நீர் அளவை தக்கவைக்க காலில் உள்ள ஷூவை கழட்டி அதில் என் சிறு நீரைப் பிடித்து அதனைக் குடித்தேன்" என்று தான் உயிர்பிழைத்த பயங்கர அனுபவத்தைப் பற்றி கூறினார்.இவருக்கு அருகில் இடிபாடுகளில் 10 பேர் சிக்கியிருந்ததாகவும் அவர்களுக்கும் தான் இந்த யோசனையைக் கூறியதாகவும் ஆனால் அவர்கள் அதனை கேட்கவில்லை எனவும் இதனால் ஒவ்வொருவராக தன் கண் முன்னால் மரணமடைவதை காண நேரிட்டது என்று‌ம் கூ‌றினார்.பெங்குடன் மேலும் 2 ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோரும் மீட்கப்பட்டனர். இவர்கள் பெங்கின் வழியை கடைபிடித்து உயிர்பிழைத்ததாக கூறியுள்ளனர்.

0 comments: