7 June 2008

மெடிக்ளைம் பாலிசி

அவசர காலத்தில் மருத்துவச் செலவுகளுக்குக் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில்தான் எல்லோருமே மெடிக்ளைம் எடுக்கிறார்கள். ஆனால், இன்ஷ¨ரன்ஸ் நிறுவனங்கள் செய்யும் குழப்பங்கள் இந்த மெடிக்ளைம் பக்கம் மக்களை வரவிடாமல் செய்கின்றன. ஆனால், சமீபத்தில் உச்சநீதிமன்றம் மெடிக்ளைம் தொடர்பாகக் கொடுத்திருக்கும் தீர்ப்பு குழப்பங்களைத் தவிர்க்கும் சூழலை உருவாக்கி இருக்கிறது.


யுனைடெட் இன்ஷ¨ரன்ஸ் நிறுவனத்தில் 1995-ம் ஆண்டு மெடிக்ளைம் எடுத்த ஒருவர், ஒழுங்காக பிரீமியம் செலுத்தி வந்திருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இதயநோய் தொடர்பாக சிகிச்சை


எடுத்த அவர், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்துகொண்டிருக்கிறார். அதற்கான மருத்துவ க்ளைமை இன்ஷ¨ரன்ஸ் நிறுவனம் கொடுத்திருக்கிறது. அதன்பிறகு 2001-02 காலகட்டத்தில் இந்த நோய் தொடர்பாக சிகிச்சை எடுத்ததோடு 2002-ல் பைபாஸ் அறுவை சிகிச்சையும் செய்திருக்கிறார். ஆனால், அதற்கான க்ளைமைத் தர மறுத்ததோடு, 2003-ல் அவர் பாலிசியை புதுப்பிக்கச் சென்றபோது மறுத்தும்விட்டது இன்ஷ¨ரன்ஸ் நிறுவனம்.


அதனை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில்தான், 'மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டியது அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடமை. பாலிசி எடுப்பதற்கு முன் நோய் இருந்ததாகச் சொல்லி க்ளைம் கொடுக்க மறுப்பதோ, முந்தைய சிகிச்சைகளைக் காரணம் காட்டி பாலிசியைப் புதுப்பிக்க மறுப்பதோ கூடாது' என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறது.


இந்தத் தீர்ப்பு பற்றியும் மெடிக்ளைம் பெறுவது பற்றியும் பொதுத்துறை இன்ஷ¨ரன்ஸ் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற தியாகராஜனிடம் கேட்டோம். இப்போது எஸ்.பி.டி. இன்ஷ¨ரன்ஸ் பார்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார்.


''பாலிசி எடுப்பவர்கள் எதற்கெல்லாம் க்ளைம் கிடைக்கும் என்பதைக் கவனத்துடன் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். எப்போதுமே புதிதாக பாலிசி எடுப்பவர்கள், அதை எடுப்பதற்கு முன் உள்ள நோய்களுக்கு சிகிச்சை பெறும்போது க்ளைம் பெறமுடியாது.


பாலிசி எடுத்த பிறகும் கூட குறிப்பிட்ட காலத்துக்கு நோய்க்கான சிகிச்சைக்கு க்ளைம் பெறமுடியாது. இதற்கான அடிப்படைக் காரணமே, 'அந்த குறுகியகாலத்தில் நோயின் தாக்குதல் ஏற்பட்டிருக்க முடியாது. அது பாலிசி எடுக்கும் முன்பே உள்ள நோயின் தாக்கமாகத்தான் இருக்கும்' என்பதுதான்! பாலிசி எடுக்கும்போது ஒருவருக்கு ரத்தக்கொதிப்பு இருக்கிறது, இதனால் பாலிசிகாலத்தில் அது ஹார்ட் அட்டாக் வர வழி வகுக்கும் எனமுடிவு செய்து நிறுவனம் பாலிசி தர மறுக்கவோ அல்லது அதற்கு க்ளைம் தரவோ மறுக்கமுடியாது. ஏனென்றால் ஹார்ட் அட்டாக் ரத்தக்கொதிப்பினால்தான் வரும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது.


ஏற்கெனவே பாலிசி எடுத்து அதை புதுப்பித்துக்கொண்டிருப்பவர் புதுப்பித்த அடுத்தநாளே சிகிச்சைக்குச் செல்லலாம். க்ளைம் உண்டு. இந்த வழக்கில் க்ளைம் மறுக்கப்பட்டவர் இந்த வகையைச் சேர்ந்தவர். அதனால், அவருக்கு பாலிசிக்கு முன்புள்ள நோய் என்பது செல்லுபடியாகாது.


ஆனால், நிறுவனம் அனுமதித்த சிகிச்சை பெறும் நோய்களுக்கான பட்டியலில் உள்ளவற்றுக்கு மட்டுமே மேலே சொன்னவை பொருந்தும். இதைத்தவிர, சிகிச்சை பெறமுடியாத நோய்கள் பட்டியல் எதுவென்றும் தெரிந்துகொள்ள வேண்டும்'' என்றார் தியாகராஜன்.


நன்றி, விகடன்.

0 comments: