16 July 2008

உங்கள் பயர்பாக்ஸில் கட்டாயம் இருக்க வேண்டியவை



நீங்கள் இப்போதுதான் பயர்பாக்ஸ் பிரெளசரை பயன்படுத்துகிறேர்களா??? நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.


இல்லையென்றால் பயர்பாக்ஸ் பிரெளசரை இங்கு இலவசமாக பதிவிறக்கலாம்.


இப்போது உலகின் மிகவும் சிறப்பான பிரெளசரில் குறிப்பிடத்தக்கது பயர்பாக்ஸ். சில தினங்களுக்கு முன்பு இந்த மென்பொருள் நிறுவனம் மென்பொருள் பதிவிறக்கத்தில் கின்னஸ் சாதணை எல்லாம் நிகழ்த்தியது. சரி விஷயத்திற்க்கு வருவோம். இந்த பயர்பாக்ஸ் பிரெளசரில் அனைவரையும் கவர்ந்த விஷயம் plug-insதான். ஆயிரக்கணக்கான plug-insல் உள்ளன.


முக்கியமான ஐந்து Plug-insகள் மட்டும் இதோ உங்களுக்காக.


1.IETab
நீங்கள் Internet Explorerயை விரும்பினாலும் வெறுத்தாலும் அது இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. துரதிஷ்டவசமாக சில வளைத்தளங்கள் அதில் மட்டும் தான் ஒழுங்காய் தெரியும். அதற்க்கான தீர்வு தான் இந்த plug-ins. பயர்பாக்ஸில் ஒரு வளைத்த்ளம் சரியாக தெரியவில்லை என்றால் Statusbarல் ஒருசிறிய ஐக்கான் இருக்கும் அதை கிளிக்கினால் பயர்பாக்ஸ் தானகவே அது Internet Explorerல் அந்த வளைத்தளம் எவ்வாறு தெரியுமோ அதை பயர்பாக்ஸிலேயே பார்க்கலாம்


2. Autocopy
நீங்கள் செலக்ட் செய்த TEXTடுகளை உடனடியாக கிளிப்போர்டில் காப்பி செய்து நீங்கள் Mouseன் மிடில் பட்டனை அழுத்தும் போது Pasteசெய்கிறது. இதனால் Ctrl + C & Ctrl + V போன்ற தேவையற்ற கீபோர்டு சாட்கட்கள் தேவையில்லை.


3.GMailManager
நீங்கள் GMailலில் கணக்கு வைத்துள்ளிர்களா நிச்சயம் உங்களுக்கு இந்த plug-ins மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இதில்
• ஒரே ஒரு கிளிக்கில் நிறைய GMail கணக்குகளை Login செய்யலம்
• ஒரே ஒரு கிளிக்கில் உங்களுடைய GMailன் Inboxயை ஓப்பன் செய்யலாம்
• உங்களுக்கு வந்த கடைசி 10மெயில்களை பட்டியலிடுகிறது.
• புதிதாக மெயில் வந்தால் உங்களுக்கு அலார்ட் செய்கிறது
• வேண்டுமென்றால் புதிதாக மெயில் வந்தால் உங்களுக்கு ஒலி அலார்ட் செய்கிறது


4.Fireuploader
Flickr, Google Picasa Albums, YouTube, Facebook and Box.net. போன்ற தளங்களில் உங்களுடைய Fileகளை Upload விரைவாக செய்யலாம்.


5.Piclens
இணையதில் நீங்கள் தேடும் படங்களை அட்டகாசமாய் 3D தாக்கத்தில் "ஸ்லைடு ஷோ"போல இறக்கம் செய்யாமலே பார்க்க இந்த Add-on உதவுகின்றது.


Quick links to download and install the plug-ins


1. Download IETab
2. Download Autocopy
3. Download GMailManager
4. Download Fireuploader
5. Download Piclens

3 comments:

  • கூடுதுறை says:
    19 July 2008 at 11:02 am

    firefox 3.01 ல் எடுத்துக்கொள்ள மறுக்கிறதே...

    அடுத்து பயர்பேக்ஸ் google toolbar 3.01 க்கு இல்லையா?

    நீங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்கவில்லயா?


    பின்னுட்டத்தில் வெரிபிகேசனை எடுத்து விடுங்கள்..

    நன்றி

  • KRICONS says:
    19 July 2008 at 5:07 pm

    //firefox 3.01 ல் எடுத்துக்கொள்ள மறுக்கிறதே//
    எந்த Plug-ins எல்லா Plug-insகளுமா???

    //அடுத்து பயர்பேக்ஸ் google toolbar 3.01 க்கு இல்லையா?//

    இங்கு பதிவிறக்கலாம் http://www.google.com/tools/firefox/toolbar/FT3/intl/en/
    பதிவிறக்கதிற்க்கு முன்னால் ஒரு Plug-ingயை இணைக்கு மாறு கேட்கும். Plug-ingயை இணைத்து முயர்சிக்கவும்

    //நீங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்கவில்லயா?//

    இணைக்கப்பட்டுள்ளது


    //பின்னுட்டத்தில் வெரிபிகேசனை எடுத்து விடுங்கள்//

    எடுத்து விட்டேன்

    வணக்கம்.

  • Subash says:
    17 September 2008 at 12:07 pm

    மிக்க நன்றி
    firefox 3.01 க்கு ஒத்திசைவானதா என பார்த்து டவுண்லோட் செய்தால் பிரச்சனையில்லை. இப்ப நிறைய ஆட்டோன்களை அப்கிறேடு செய்துவிட்டார்கள்