5 April 2009

உங்கள் Blogன் மதிப்பு...

நேற்று இரவு தூக்கம் வரவில்லை சரி நமக்கு தான் இணையம் இருக்கிறேதே என்று வழக்கம்போல் எனது வேலையை தொடங்கினேன். நமது சர்க்கரை வலைப்பதிவின் Templateயை பார்த்து எனது நாக்கில் எச்சி ஊரியது ( இத எல்லாமா எழுதுவ?). சரி நானும் எனது Blogன் Templateயை மாற்றுவோம் என்று நினைத்து( அங்க ஆரம்பித்தது தான் வினை) பல Blog Templateயை பதிவிறக்கினேன். அப்படி மாற்றும் போது கடைசியாக உள்ள எனது Templateன் HTML Code பதிவிறக்காமால் விட்டுவிட்டேன். நேற்று இரவு முழுவதும் எனது வலைப்பதிவு பலவித மாடல்களில் வலம் வந்தது... ( ஏதோ பல மாடல் கார் வந்த மாரி சொல்ர!) எந்த Templateம் எனது Blogல் உள்ள Widgetகளுக்கு பொருத்தமாக இல்லை. நேரம் நள்ளிரவு தாண்டியது இனிமேலும் இணையத்தில் இருந்தால் நல்லதல்ல (யாருக்கு?) என்று எதோ ஒரு Templateயை செட் செய்து தூங்க்கப்போனேன். அப்போது தான் நினைத்தேன் டேய் அந்த சர்க்கரை பதிவை எழுதுர நண்பர் சுரேஷ் ஒரு மென்பொருள் வல்லுனர் நீ ஒரு கட்டிட பொரியாளர் உனக்கு எதுக்குடா அவரோட Templateயை பார்த்து எச்சி ஊரனும். எந்த அளவுக்கு நீ Blog Design பன்னதே பெரிய விஷயம் இருக்குர Template யே போதும்ன்னு நினைச்சேன். காலையில் ஒரு வழியாக எனது Blog Template designயை கொண்டுவந்து விட்டேன். அதன் விளைவாகத்தான் இந்த பதிவு.

(என்னாட இவன் தலைப்பை பத்தி சொல்லாம இப்படி சொந்த கதை சோக கதை எல்லாம் சொல்ரானேன்னு பார்க்குறேங்களா?? அட விகடன், குமுதம் அதில் எல்லாம் இப்படிதான் தலைப்பை பற்றி கடைசியாகத்தான் வரும்.)

இப்படி இணையைதில் தேடும் போது கிடைத்ததுதான் இந்த பக்கத்தில் வலதுபுறம் பார்க்கும் எனது Blogன் விலை. இந்த Blog ன் மதிப்பு $564.54. சந்தோசமாக இருந்தது. நீங்களும் உங்களின் Blogன் மதிப்பை தெரிந்துகொள்ள கிளிக்குங்கள். இதெல்லாம் சரி இந்த ரேட்க்கு இந்த Blogயை வாங்க யாராவது இருந்தா தெரிவிக்கவும்

11 comments:

  • Karthik says:
    5 April 2009 at 6:27 pm

    உங்களுக்கு டெம்பிலெட் தேவையென்றால் இங்கே தரவிறக்கி கொள்ளுங்கள்.அதெப்பிடிங்க என்னோட பிளாக் விலையும் $564.54 இருக்கு.

  • ஆ.ஞானசேகரன் says:
    5 April 2009 at 6:58 pm

    நன்றி..

  • ஆ.ஞானசேகரன் says:
    5 April 2009 at 6:58 pm

    நன்றி..

  • Suresh says:
    6 April 2009 at 11:40 pm

    நன்பா உங்களுக்கு என்ன உதவி வேணும் சொல்லுங்க செஞ்சிடுவோம் ..

  • Suresh says:
    6 April 2009 at 11:42 pm

    //அந்த சர்க்கரை பதிவை எழுதுர நண்பர் சுரேஷ் ஒரு மென்பொருள் வல்லுனர்//

    மச்சான் என்னை முத முதல ஹஹ ஒரு மென்பொருள் வல்லுனரு ஒத்துகிட்ட நல்லவரு நிங்க தான் :-) ஹா

  • Suresh says:
    6 April 2009 at 11:48 pm

    என் பதிவுக்கு வந்ததுக்கு ரொமப நன்றி ஒரு பிண்ணோட்டத்தில் சொல்லி இருக்கலாமே உங்கள் பதிவு பற்றி நானே கண்டுபிடித்தி வந்தேன் காரணம் நிங்க கொடுத்த லிங் மூலம் என் சக்கரை கடைக்கு சில பேர் வந்த வழி தெரிந்து வந்தேன் ....

    //உனக்கு எதுக்குடா அவரோட Templateயை பார்த்து எச்சி ஊரனும். எந்த அளவுக்கு நீ Blog Design பன்னதே பெரிய விஷயம் இருக்குர Template யே போதும்ன்னு நினைச்சேன்.//

    உங்களுக்கு என்னோட டெம்பளேட் அவ்வளவு புடித்ததா ஒரு பதிவே போட்டுருக்கிங்க ...

    சரி உங்களுக்கு ஒரு லிங்க் தரேன் ... http://blogger-templates.blogspot.com/
    Please import ur blog from settings and save a copy of the exsisting things and import an xml if u need further help please contact suresh.sci@gmail.com

  • KRICONS says:
    7 April 2009 at 5:57 am

    நன்றி கார்த்திக்...

    ///அதெப்பிடிங்க என்னோட பிளாக் விலையும் $564.54 இருக்கு.///

    ஆச்சரியமத்தான் இருக்கு...

  • KRICONS says:
    7 April 2009 at 5:58 am

    வணக்கம் ஞானசேகரன்

  • KRICONS says:
    7 April 2009 at 6:03 am

    ரொம்ப நன்றி சுரேஷ்

    ///நன்பா உங்களுக்கு என்ன உதவி வேணும் சொல்லுங்க செஞ்சிடுவோம் .///

    கண்டிப்பாக உதவி தேவைப்பட்டால் கேட்கிறேன்.

    ///மச்சான் என்னை முத முதல ஹஹ ஒரு மென்பொருள் வல்லுனரு ஒத்துகிட்ட நல்லவரு நிங்க தான் :-) ஹா///

    இதுக்கு எல்லாம் ரொம்ப பீல் பன்னாதே மாப்பிளே..


    கண்டிப்பாக உதவி தேவைப்பட்டால் கேட்கிறேன் சுரேஷ். நன்றி

  • SUBBU says:
    16 April 2009 at 5:26 pm

    என் Blogன் மதிப்பு Rs 0.00 :(((((((

  • KRICONS says:
    16 April 2009 at 5:33 pm

    கவலை படாதிங்க சுப்பு...

    நிறைய எழுதுங்க மதிப்பை உயர்த்திடுங்க